பத்து கஜா, பேராக்: கைத்தொலைபேசியில் ஆபாசக் காணொளிகளைப் பார்த்த 12 வயது சிறுவன் நான்கு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது அந்தச் சிறுவன் தனது தவற்றை ஒப்புக்கொண்டதாக பத்து கஜா போலிஸ் துணை ஆணையாளர் அகமது அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியைக் குற்றமிழைத்த சிறுவனின் தாயார் பராமரித்துக்கொண்டிருந்தார். தனது தாயார் இல்லாத நேரத்தில் சிறுவன் அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமி தனது பிறப்புறுப்பில் வலி இருப்பதாகத் தனது தாயாரிடம் கூறியதை அடுத்து, அவரது தாயார் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிறுமிக்குக் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர், போலிசாரிடம் புகார் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
ஜூலை ஐந்தாம் தேதி வரை சிறுவன் தடுப்புக் காவலில் வைக்கப்படுவான் என்றது காவல்துறை.

