இந்தோனீசியாவின் போகோர் நகரில் நாயைப் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்ற கிறிஸ்துவப் பெண் மீது சமய நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போலிசார் தெரிவித்துள்ளர். அந்த 52 வயது பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிந்தும் அதிகாரிகள் அவர் மீது அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதைப் போலிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் உதவி செய்தார்.
2013ஆம் ஆண்டில் அவருக்கு மனச்சிதைவு இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.
நடந்தது குறித்து பதற்றப்படாமல் முஸ்லிகள் தங்கள் அமைதியைக் காக்குமாறு இந்தோனீசியத் துணை அதிபர் யூசுஃப் கல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

