தலைகுப்புறக் கவிழ்ந்த படகு; 30 பேர் பலி

தலைகுப்புறக் கவிழ்ந்த படகு; 30 பேர் பலி

1 mins read
ad78a222-35cb-4602-bcb3-eec1a413dd0b
படகு குப்புறக் கவிழ்ந்த சம்பவத்தில் மாண்ட ஒரு பிள்ளையின் சடல உறையை மூடுகிறார் ஓர் அதிகாரி. (படம்: ஏஎஃப்பி) -

பாகிஸ்தானில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு குப்புறக் கவிழ்ந்த சம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் வடமேற்கிலுள்ள கைபர் பக்துன்குவா மாநிலத்திலுள்ள ஹரிப்பூர் என்ற ஊரின் அருகில் படகு திடீரெனக் கவிழ்ந்ததாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தின்போது படகில் 80 பயணிகள் இருந்தனர்.

மரத்தால் செய்யப்பட்ட அந்தப் படகு கவிழ்ந்ததற்கு அதிக எடை காரணம் என்றனர் அதிகாரிகள். இத்தகைய படகு விபத்துகள் பாகிஸ்தானில் ஏற்படுவது வழக்கம்.