சுழற்காற்றில் சிக்கி அறுவர் மரணம்

சுழற்காற்றில் சிக்கி அறுவர் மரணம்

1 mins read

ஷங்ஹாய்: சீனாவின் வடகிழக்குப் பகுதியை நேற்று முன்தினம் வாட்டிய கடும் சுழற்காற்றில் சிக்கி குறைந்தது அறுவர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர். வினாடிக்கு 23 மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினாலும் தூக்கி வீசப்பட்ட பொருட்களாலும் தாக்கப்பட்டதில் உயிர் சேதம் ஏற்பட்டது.

வடகிழக்கு மாகாணமான லியாவ்னிங்கின் கையூவான் நகரில் அன்று மாலை திடீரென சுழற்காற்று வீசியது. வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்த அந்தச் சுழற்காற்றில் சிக்கி வாகனங்கள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன.