விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் போயிங் நிறுவனம்

விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் போயிங் நிறுவனம்

1 mins read

நியூயார்க்: இந்தோனீசியா, எத்தியோப்பியாவில் நடந்த இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போயிங் நிறுவனம் 100 மில்லியன் டாலரை (S$135 மி.) உதவித் தொகையாக அறிவித்துள்ளது.

போயிங் நிறுவன தயாரிப்பிலான '737 மேக்ஸ்' ரக விமானங்கள் இந்தோனீசியாவிலும் எத்தியோப்பியாவிலும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் அவற்றில் பயணம் செய்த 346 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருதி, அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான 737 மேக்ஸ் ரக விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.