புத்ராஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் முதல் திருமணத்தில் பிறந்த புதல்வரும் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளருமான ரிஸா அஸிஸ் (படம்), மலேசிய ஊழல் தடுப்பு ஆணை யத்தின் (எம்ஏசிசி) தலை மையகத்தில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'குட் ஸ்டார் லிமிடெட்' என்ற நிறுவனத்திடமிருந்து நிதி மோசடி மூலம் கிடைத்த பணத்தைப் பெற்றுக்கொண்டதாக 'ரெட் கிரனைட் பிக்சர்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ரிஸா மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
மலேசிய அரசாங்கத்தால் தேடப்படும் நிலை யில் தலைமறைவாக இருந்து வரும் ஜோ லோ வுக்கு 'குட் ஸ்டார்' நிறுவனம் சொந்தமானது எனத் தெரிகிறது.
கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ரிஸா மீது குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரசித்திபெற்ற ஆஸ்கர் விருதுக்கு முன் மொழியப்பட்ட 'தி உல்ஃப் ஆஃப் வால் ஸ்திரீட்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தை ரெட் கிரனைட் நிறுவனம்தான் தயாரித்தது. 1எம்டிபியில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை இந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் பெற்றதாக அமெரிக்க நீதித்துறை ஏற்கெனவே கூறி இருந்தது.

