மலேசியா: வாக்குரிமை வயதை 18ஆக குறைக்கும் மசோதா

மலேசியா: வாக்குரிமை வயதை 18ஆக குறைக்கும் மசோதா

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் வாக்­குரிமை வயதை 21லிருந்து 18ஆக குறைக்க வழி செய்யும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கலானது.

இதற்கு தேவையான அரசியல் நிர்ணயச் சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மைக்கு தேவையான 148 உறுப்பினர்கள் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு இல்லை.

அந்தக் கூட்டணியும் அதனு டன் நட்பு பாராட்டும் கட்சிகளுக் கும் தற்பொழுது 139 உறுப்பினர் களே உள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு அவை தங்கள் சொந்த பலத்தில் சட்ட வடிவம் கொடுக்க முடியாது.

இதையடுத்து, இந்த மசோ தாவுக்கு சட்ட வடிவம் கொடுப் பதற்கு ஆளும் கூட்டணி எதிர்த்தரப்பினரின் ஆதரவை நாட முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்பில், அரசியல் நிர்ணயச் சட்ட திருத்த மசோதாவை நேற்று தாக்கல் செய்த மலேசியாவின் இளையர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சையது சாதிக் அப்துல் ரஹ்மான், "இந்தத் திருத்தத்தின் மூலம் முற்போக்கு ஜனநாயக முறைக்கேற்றவாறு தேர்தலில் அதிக அளவிலான மலேசியர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்று அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க முடியும்," என்று கூறினார்.

ஆளும் கூட்டணியின் இந்தக் கோரிக்கைக்கு அம்னோ, பாஸ் எனப்படும் இஸ்லாமிய கட்சி, ஜிபிஎஸ் எனப்படும் சரவாக் மாநிலக் கட்சி ஆகியவை இந்த திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க சில நிபந்தனைகளை விதித்துள்ளன.

அவற்றில் முக்கியமான ஒன்று, வாக்குரிமை பெறுவோர் 18 வயதானதும் அவர்களின் பெயர் கள் வாக்காளர் பட்டியலில் இயல் பாகவே இடம்பெற வகைசெய்யும் விதமாக சட்ட திருத்தம் இருக்க வேண்டும் என்பது.

அத்துடன், தேர்தலில் ஒருவர் வேட்பாளராக நிற்பதற்கான வயதும் 21லிருந்து 18ஆக குறைக்க வகைசெய்யும் தனிநபர் மசோதா ஒன்றையும் தாக்கல் செய்ய எதிர்த்தரப்பு முடிவு செய்து உள்ளது. மலேசிய நாடாளுமன்றத் தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அரசியல் நிர்ணய சட்ட திருத்த மசோதாவில் எதிர்த்தரப்பினரின் இந்த திருத்தங்கள் இடம்பெற வில்லை என்று செய்தித் தகவல் கள் கூறுகின்றன.

எனினும், இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன் இது குறித்து மற்ற கட்சிகளுடன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

இந்த மசோதாவின் இரண்டா வது வாசிப்பு ஜூலை 16ஆம் தேதி இடம்பெறும் என்பதுடன் இது மன்றத்தில் அதற்கு அடுத்த நாளான 17ஆம் தேதி வாக்களிப்­புக்கு விடப்படும் என்றும் கூறப்­ படுகிறது.

இந்த மசோதா அவையின் ஒப்புதல் பெற்றால், பல கட்சிகளின் ஆதரவுடன் சட்ட வடிவம் பெறும் முதல் மசோதாவாக இது இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், 2023ஆம் ஆண்டில் வரும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த மலேசிய பொதுத்தேர்தலில் நாட் டின் 30 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வாக்கு அளிக்கும் உரிமை பெறுவர் என்று கூறப்படுகிறது.