கோலாலம்பூர்: மலேசியாவின் சோதனைச்சாவடிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் பல குறுகிய, நீண்டகால முயற்சிகளை மேற்கொள்ள அந்நாட்டின் அமைச்சரவைக் குழு நேற்று முடிவெடுத்தது.
துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உறுதி செய்யப்பட்டன.
குறிப்பாக, கடற்பாலத்திலுள்ள சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை வளாகத்திலும் இரண்டாம் இணைப்பிலுள்ள சுல்தான் அபு பக்கர் வளாகத்திலும் ஏற்படும் நெரிசலைக் குறைக்க இந்நடவடிக் கைகள் செயல்படுத்தப்பட உள் ளன.
இக்கூட்டத்தின் முடிவில் நெரி சல், நிர்வாகம் ஆகியவற்றில் உள்ள சவால்களைச் சுட்டிய அமைச்சரவைக் குழு, உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புமுறையில் மேம்பாடுகள் தேவைப்படுவதாக தெரிவித்தது.
மலேசிய தானியக்கக் குடி நுழைவுச் சோதனைமுறை (மேக்ஸ்) சென்ற மாதம் 19ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டதில் நெரிசல் சமாளிக்கப்படுகிறது.
அத்துடன், நெரிசல் அதிகம் இல்லாத முகப்புகளில் வேலைசெய்யும் அதிகாரிகளை அதிக நெரிசல் ஏற்படக்கூடிய முகப்புகளுக்கு நிலைமைக்கேற்ப மாற்று வதும் குறுகியகாலத் திட்டங்களில் ஒன்றாக அமையும்.
மேலும், எந்தத் திசையில் வாகனங்கள் குறைவாகச் செல்கின்ற னவோ அங்குள்ள ஒரு தடம் எதிர்திசையாக மாற்றப்பட்டு வாகனங்கள் செல்லப் பயன்படுத்தப் படும்.
குடிநுழைவு அதிகாரிகள் கூடுதல் நேரம் வேலை செய்வதைக் கட்டாயமாக்குவதுடன் மோட்டார் வாகனமோட்டிகளுக்கான எல்லா முகப்புகளையும் திறந்துவிடுவதும் செயல்படுத்தப்படும்.
மலேசியாவைவிட்டு வெளியேறும் மோட்டார் வாகனமோட்டி களுக்கான முகப்புகளை அதிக ரிப்பது நீண்டகால முயற்சிகளில் ஒன்றாகக் குழு முடிவெடுத்தது.
அத்துடன், மலேசியாவைவிட்டு வெளியேறுவோர் 'பயோமேட்ரிக்' முறையிலிருந்து விலக்கு பெறுவர்.
மேலும், குடிநுழைவு இடங் களில் அமைந்த முகப்புகள் 99 விழுக்காடு நிரப்பப்படுவது நீண்டகால முயற்சிகளில் ஒன்று.
மலேசியா, சிங்கப்பூர் என்று இருமுறை சோதனைச் சாவடிகளில் அனுமதி பெறுவதற்குப் பதிலாக ஒரே முறை ஒப்புதல் பெறுவதற்கும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு நாடப்படும்.
வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்காக தானியங்க நுழைவாயில்கள் இனி பயன்படுத்தப் படும் என்றும் முடிவாகியது.
நாட்டின் எல்லைகளிலும் சோதனைச்சாவடிகளிலும் இதன் தொடர்பில் நெரிசலைக் கண்காணிக்க அமைப்பு ஒன்றை நிய மிப்பது குறித்தும் மலேசிய அமைச்சரவைக் குழு ஆய்வு செய்து வரு கிறது.

