ஹாங்காங்: மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

ஹாங்காங்: மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

2 mins read

ஹாங்காங்: பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்துப் பேச ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் விரும்புவதாக தெரி விக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக ஹாங் காங்கில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.

சீனாவுக்கு நாடுகடத்தும் மசோதாவை ரத்து செய்யக் கோரி ஹாங்காங்கில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அந்த மசோதா சட்டமாக்கப் பட்டால் ஹாங்காங் மீது சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அதிருப்திக் குரல்கள் எழுந் துள்ளன.

இந்நிலையில், அண்மையில் சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக் கப்பட்டு 22 ஆண்டு நிறை வையொட்டி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் சட்டமன்றக் கட்டடத்துக்கு வெளியே கூடினர். கட்டடத்தின் கண்ணாடிக் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களை மிளகு கலந்த தண்ணீர் பீய்ச்சி விரட்டி அடித்தனர் ஹாங்காங் போலிசார்.

பொதுமக்களுக்கு எதிராக போலிசார் வன்முறையைக் கையாண்ட தற்கு கேரி லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

போராட்டங்கள் காரணமாக நாடுகடத்தும் மசோதாவைச் சட்டமாக்குவதை திருமதி லாம் ஒத்திவைத்துள்ளார்.

ஆனால் ஒத்திவைப்பது ரத்து செய்வதற்கு இணையாகாது என்று போராட்டம் நடத்துபவர்கள் கூறுகின்றனர்.

"பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டங்களில் பங்கெடுத்த இளைஞர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருமதி லாம்," என்று திருமதி லாமின் செய்தித்தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்து உள்ளார்.

ஆனால் அனைத்துத் தரப்பி னருக்கும் அழைப்பு விடுக்கப் படாததால் பேச்சுவார்த்தை வெளிப்படைத்தன்மை இல்லாதது என்று குறைகூறி ஹாங்காங்கின் எட்டு பிரதான உயர்கல்விக் கழகங்களில் ஒன்று திருமதி லாமைச் சந்திக்க மறுத்துவிட்டது.

"பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஹாங்காங் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்," என்று ஹாங்காங் மாணவர் சங்கம் தெரிவித்தது.

இதற்கிடையே, மசோதாவை எதிர்த்து போராட்டங்களை நடத் திய இளைஞர்களுக்கு ஆதரவு காட்ட ஹாங்காங்கில் நேற்று மாலை ஆயிரக்கணக்கானோர் கூடினர். பொது இடத்தில் அமர்ந்தவாறு போராட அவர்கள் திரண்டனர்.

ஒரு நிமிட மௌன அஞ்சலி யுடன் நேற்றைய போராட்டம் தொடங்கியது.