கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரின் முன்னாள் கணவருக்குப் பிறந்த மகன் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது தொடர்பாக ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான 'ரெட் கிரானைட் பிக்சர்ஸின்' இணை நிறுவனரான ரிசா அசிசுக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. கையாடப்பட்ட 1எம்டிபி நிதியிலிருந்து ரிசா 248 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரிசாவுக்கு 5 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

