வடகொரியப் பிடியிலிருந்து ஆஸ்திரேலியர் விடுதலை

வடகொரியப் பிடியிலிருந்து ஆஸ்திரேலியர் விடுதலை

1 mins read

தோக்கியோ: வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயது ஆஸ்திரேலிய மாணவர் திரு அலெக் சிக்லி விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் பிற்பகல் அவர் எவ்வித முன்னறிவிப்புமின்றி சீனத் தலை நகர் பெய்ஜிங்கை அடைந்தார்.

அதன் பிறகு அவர் ஜப்பான் தலைநகர் தோக்கியோவுக்கு விமானம் மூலம் சென்றார். அங்கு அவரது மனைவி வசித்து வருகிறார். வழக்கநிலைக்குத் திரும்ப தாம் திட்டமிட்டிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறி னார். வடகொரியாவில் தடுத்து வைத்திருந்தது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணம், வடகொரிய அதிகாரிகளால் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை.