கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம்

கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம்

1 mins read
afafc202-5772-4807-889e-cb08cb0016ef
நிலநடுக்கம் காரணமாகப் பிளவுபட்டிருக்கும் சாலை. படம்: ஏஎஃப்பி -

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் தென்கலிஃபோர்னியாவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று உலுக்கியது. நிலநடுக்கம் காரணமாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்துக்கு வடகிழக்கில் உள்ள பாலைவன நகரில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிலருக்கு இலேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரிக்டர் அளவில் 6.4ஆகப் பதிவான நிலநடுக்கம், கடந்த ஏறத்தாழ 20 ஆண்டுகளில் அவ்வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள ஆகப் பெரிய நிலநடுக்கமாகும்.

காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்ட கெர்ன் கவுன்டி தீயணைப்புத் துறை, நிலநடுக்கம் காரணமாக எரிவாயுக் கசிவு ஏற்பட்டதாகவும் இரண்டு வீடுகளில் தீ மூண்ட தாகவும் கூறியது.