நள்ளிரவில் யானைகள் செய்த சேட்டை

குளுவாங்: பெரும் சத்தத்தால் தூக்கம் கலைந்து நேற்று இதவு கண்விழித்தவர் வீட்டின் வெளியே இரு யானைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

கம்போங் ஸ்ரீ திமோரில் வசிக்கும் அஃபியன் கமின், 36, பேரொலி கேட்டு வீட்டின் முன்னால் எட்டிப் பார்த்ததில் இரு யானைகள் அங்கு நிற்பதைக் கண்டார். அதிர்ச்சி ஒரு பக்கம், அச்சம் ஒரு பக்கம் அவருக்கு. கார் நிறுத்தி வைத்திருந்த இடத்தை யானைகள் நாசம் செய்யத் தொடங்கியதை வேறு வழியில்லாமல் அவரால் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது.

தொடர்ந்து யானை எழுப்பிய பேரொலியில் அஃபியனின் மனைவி, மாமியார் மற்றும் இரு பிள்ளைகளும் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டனர். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கழித்துத்தான் யானைகள் அவ்விடத்தை விட்டு அகன்றன. காரின் கூரைப்பகுதி தட்டையாக்கப்பட்டதுடன் தோட்டத்தில் இருந்த வாழை, தென்னை, செம்பனை மரங்களும் கடுமையாகச் சேதமடைந்தன. யானைகள் தைரியமாக அத்துமீறி கிராமத்திற்குள் வரத் தொடங்கியுள்ளது கவலையை அளிப்பதாகக் கூறி அஃபியன், இதன் தொடர்பில் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon