டிரம்ப்: குடிநுழைவுச் சோதனைகள் வெகுவிரைவில் தொடங்கிவிடும்

டிரம்ப்: குடிநுழைவுச் சோதனைகள் வெகுவிரைவில் தொடங்கிவிடும்

1 mins read

வா‌ஷிங்டன்: குடிநுழைவுச் சோதனைகள் விரைவில் ஆரம்பமாகும் என்று நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

நாடுகடத்தும் நடவடிக்கைகள் பெருமளவில் நடத்தப்படும் என்று திரு டிரம்ப் கூறியதை எதிர்த்துத் தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்க குடிநுழைவு ஆதரவுக் குழுக்கள் பதிலடி கொடுத்துள்ளன. இதன் தொடர்பில் ஏற்கெனவே தன் தேர்தல் பிரசாரத்தில் குரல் கொடுத்திருந்த திரு டிரம்ப், 2020ஆம் ஆண்டுக்கான அடுத்த தேர்தல் பிரசாரத்திலும் இக்குடிநுழைவுத் திட்டத்தை இணைத்துள்ளார். நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்தோரை அகற்றும் இந்த நாடுகடத்தும் நடவடிக்கையைச் சென்ற மாதம் நடத்தவிருந்தார் அதிபர். ஆனால் ஊடகங்கள் எப்படியோ இதற்கான தேதியை அறிந்திட அதைத் தள்ளி வைத்தார் திரு டிரம்ப். அமெரிக்காவுக்குள் எவ்வித குடியேற்ற ஆவணங்களும் இல்லாமல் பிடிபடுவோர் நாடுகடத்தப்படுவர் என்று அமெரிக்க குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவு தெரிவித்தது.