ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள்; சுற்றுப்பயணத்துறை பாதிப்பு

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள்; சுற்றுப்பயணத்துறை பாதிப்பு

2 mins read

ஹாங்காங்: கடந்த சில வாரங் களாகவே சீனாவுக்கு நாடு கடத் தும் மசோதாவை எதிர்த்து நடை பெற்று வரும் போராட்டங்கள் நகரையே உலுக்கி வர, நாட்டின் சுற்றுப்பயணத் துறை வெகுவாகப் பாதிக்கப்படலாம் என்று துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஓர் இருண்ட எதிர்காலத்தை நோக்கிச் செல்வதாகவும் இதனால் ஹாங்காங்குக்கு மேலும் பொருளியல் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்றும் அவர்கள் கூறி னர்.

இதன் தொடர்பில் சர்ச் சையைத் தீர்த்து வைக்க நடை முறைக்கேற்ற பேச்சுவார்த்தைகள் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது.

திங்கட்கிழமை அன்று ஹாங் காங்கின் சட்டமன்றக் கட்டடத் தின் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரம் செய்ததில் கட்டடம் அதிக அளவில் சேதமடைந்தது. சம்பவத்தை ஆராய்ந்தது இந்த மதிப்பீடு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டங்கள் முதன்முத லில் ஜூன் மாதம் இடையே தொடங்கியதிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுப்பயணக் கூட்டம் குறைந்து வருகிறது.

இதனால் ஹோட்டல், உணவு, கண்காட்சிப் பிரிவுகள் பாதிப் படைந்து உள்ளதாகவும் கூறப்பட் டது.

தென்கிழக்காசிய நாடுகளி லிருந்து மட்டும் வரக்கூடிய சுற் றுப்பயணக் குழுக்கள் சென்ற ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப் பிடுகையில் 20 முதல் 30 விழுக் காடு குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங் களின் அதிருப்தியை ஓர் அமைதியான முறையில் தெரி விக்குமாறு சுற்றுப்பயணத் துறைக்கான சட்ட வல்லுநர் திரு யூ சி விங் கூறியுள்ளார்.

நாட்டின் சுற்றுப்பயணத் துறை. ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து பின்னடைவு காணும் என்ற அதே கருத்தைத் தெரி வித்த ஹாங்காங் சுற்றுப்பயணக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு திமத்தி சுய் டிங் பொங், இதனால் நாட்டுப் பொருளியல் வளர்ச்சியும் மெதுவடையும் என்று முன்னுரைத்தார்.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நாட்டிலுள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கும் பரவினால், தற் போதைய பாதிப்பு நிலை மேலும் கடுமையாகும் என்று எச்சரிக்கப் படுகிறது.