பாபிலோன் நகரை, யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளமாக்க கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக ஈராக் முயன்று வருகிறது. ஹில்லா அருகே உள்ள தொன்மை வாய்ந்த பாபிலோன் நகர், இவ்வாண்டு அங்கீகரிக்கப்பட்டு பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. சேற்று செங்கல்லால் ஆன கோவில்களையும் கோபுரங்களையும் கொண்டது பாபிலோன். இந்நகர் இதன் தொங்கும் தோட்டத்திற்கும் பேர் போனது. வரலாற்று சிறப்புமிக்க பண்டைய நகர்களில் அதிக மக்கள் தொகையை ஒரு காலத்தில் பெற்றிருந்தது பாபிலோன். எழுத்து, நிர்வாகம், அறிவியல் ஆகியவற்றுக்கு பாபிலோனியர்கள் அஸ்திவாரம் இட்டதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
உலக மரபுடைமைத் தளமானது ஈராக்கின் பாபிலோன் நகர்
1 mins read
படம்: ராய்ட்டர்ஸ் -

