பாசிர் கூடாங் நச்சு வாயுக் கசிவு; ஜோகூர் அரசு மீது வழக்கு

பாசிர் கூடாங் நச்சு வாயுக் கசிவு; ஜோகூர் அரசு மீது வழக்கு

2 mins read
6891ca3b-0c22-4853-81be-e7f8b7163d8b
கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி பாசிர் கூடாங்கில் சுயநினைவை இழந்த மாணவி ஒருவரை  மருத்துவ ஊழியர் தூக்கிச் சென்ற காட்சி. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உள்ள பாசிர் கூடாங்கில் அண் மையில் ஏற்பட்ட இரு காற்றுத் தூய்மைக் கேட்டுச் சம்பவங்களில் தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ள வர்கள் ஜோகூர் அரசாங்கத்தின் மீதும் மற்ற 11 தற்காப்புத் தரப்பினர் மீதும் இம்மாதம் 17ஆம் தேதி வழக்குத் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

'சுங்கை கிம் கிம்' நச்சு வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களையும் பாசிர் கூடாங் மாசுக்கு எதிரான செயற்குழுவையும் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் கமருடீன் அஹமட் உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கை தாக்கல் செய்யவுள் ளார். இது பற்றி நேற்று செய்தி யாளர்களிடம் விளக்கிய கமருடீன், "பாசிர் கூடாங் காற்றுத் தூய்மைக் கேட்டால் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்ட 120 மீனவர்களையும் 34 மாணவர்களையும் உள்ளடக்கி 160 பேரை வழக்குப் பிரதிநிதிக் கும்," என்றார்.

கடந்த மார்ச் மாதம் சுங்கை கிம் கிம் ஆற்றில் சட்டவிரோத மாகக்கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுகளால் நச்சுத் தன்மைமிக்க மீத்தேன் வாயு கசிந்து காற்றில் கலந்தது.

இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத் தால் பெரும்பாலான மாணவர் களுக்கு தலைசுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து பாசிர் கூடாங் மாவட்டத்தில் உள்ள 111 தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக டஜன் கணக்கான மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக ஜூன் 25ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு 111 பள்ளிகள் உட்பட 475 கல்வி நிலையங்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் ஜூலை 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் சில மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்கு அதே போன்ற அறி குறிகள் மீண்டும் ஏற்பட்டது என்று கூறியதால் அவர்கள் உடன டியாக மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர்.

தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் ஏற்கெனவே சுங்கை கிம் கிம் நச்சு வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை வழக்கறிஞர் கமருடீன் சுட்டிக்காட்டினார்.

மார்ச் மாதம் பாசிர் கூடாங் காற்றுத் தூய்மைக் கேட்டால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாண வர் இர்ஃபான் இதாம் வாசிருக்கு ஐந்து மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டும் வழக்குப் பதிவு செய்யப் படுகிறது என்று அவர் கூறினார்.

அந்த 12 வயது மாணவர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு அவரின் உடல் உறுப்புகளில் நடுக்கம் ஏற்பட்டது.

ஆனால் சனிக்கிழமை அன்று பேசிய மலேசிய சுகாதார துணை அமைச்சர் லீ பூன் சியே, மாணவரின் பின்னணியை ஆராய்ந்ததில் அந்த மாணவர் குறைப்பிரசவத்தில் பிறந்ததால் நான்கு வயதிலிருந்தே வலிப்பு ஏற்படும் பிரச்சினை இருந்துள்ளது என்று கூறினார்.