விண்வெளி வீரரின் கனவைக் கலைத்த அகால மரணம்

விண்வெளி வீரரின் கனவைக் கலைத்த அகால மரணம்

1 mins read
f8213e5c-80a4-4cc3-af7e-be8427feafa6
-

விண்வெளிக்குச் செல்லும் முதல் கறுப்பினத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்கராகும் வாய்ப்பைப் பெற்ற ஓர் ஆடவரின் கனவைச் சின்னாபின்னமாக்கியது ஒரு விபத்து. தென்னாப்பிரிக்க ஆகாயப்படையைச் சேர்ந்த மண்ட்லா மசேகோ கடந்த சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

'லிங்க்ஸ் மார்க் இரண்டு' விண்கலனில் ஒரு மணி நேரத்திற்குப் பயணம் செய்ய அந்த 30 வயது ஆடவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு மில்லியன் விண்ணப்பதாரர்களிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது தென்னாப்பிரிக்கர்கள் பலருக்கும் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கறுப்பினத்தவர்கள் பல்லாண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த வரலாறு இருக்கையில், மண்ட்லாவை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருவராக்கவிருந்தது இந்த வாய்ப்பு. ஆனால் இறுதியில் நடந்தது வேறு.

வாகனங்களைப் பழுதுபார்ப்பவருக்கும் துப்புரவுப் பணியாளருக்கும் பிறந்த மண்ட்லா, துடிப்பும் உத்வேகமும் நிறைந்தவர் என்று கூறப்படுகிறது. ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் தங்கி அவர் பயிற்சி பெற்றார். இணையவாசிகள் சமூகத்தளங்களில் அவரது மரணம் குறித்து தங்களது இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்