மலேசிய கிழக்குக் கரையோர  ரயில் பாதை திட்டம் தொடக்கம்

புத்துயிர் பெற்றிருக்கும் மலேசியா வில் கிழக்குக் கரையோர ரயில் திட்டத்தின் மறுதொடக்கவிழா ஜூலை 25ஆம் தேதி இடம்பெறலாம் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் மலேசிய நிறுவனங்கள் 40% வரை பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

தொடர்பை மேம்படுத்துவதுடன் பொருளியலையும் இந்த ரயில் திட்டம் வளர்க்கும் என்றார் அவர். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சீனாவுடன் இணைந்து தொடங்கிய இத்திட்டம், அதிக செலவாகும் என்பதால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், திட்ட மேம்பாட்டுக்கான செலவு 66 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து ($21.7 பில்லியன் வெள்ளி) 44 பில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளது. 688 கிலோமீட்டராக இருந்த ரயில் பாதையின் அளவும் 40 கிலோ மீட்டர் ஆக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மீண்டும் தொடங் கப்பட்டிருப்பதை அடுத்து உட்லண்ட்சுக்கும் ஜோகூர் பாரு வுக்கும் இடையிலான விரைவு ரயில் இணைப்புத் திட்டம் (ஆர்டிஎஸ்) குறித்த நற்செய்தியை யும் எதிர்பார்க்கலாம் என்று திரு ஆண்டனி கோடிகாட்டினார்.

“ஆர்டிஎஸ் திட்டம் செயலாக்கம் பெறச் செய்யவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு,” என்றார் அவர். இத்திட்டம் செப்டம்பர் வரையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட் டுள்ளது. மேலும் கோலாலம்பூருக் கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தை (எச்எஸ்ஆர்) தொடங்குவதற்கான தீர்வுகளையும் மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் திரு ஆண்டனி குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!