கைரி: இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்

கைரி: இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் இளையர், விளை­யாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதின் அம்னோவைவிட்டு வெளியேறப் போவதில்லை என்று கூறியுள்ளார். பக்கத்தான் ஹரப்­பான் அங்கம் வகிக்கும் பெர்சாத்து கட்சியுடன் இணையுமாறு தற்போ­தைய இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சாதிக் அழைப்பு விடுத்ததற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் நேற்று தம்மைச் சூழ்ந்துகொண்ட செய்தியாளர்களிடம் பேசிய கைரி, "இருக்கும் இடத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்றார்.

அப்படியானால் அமைச்சர் சையது சாதிக்கின் அழைப்பை நிராகரிக்கிறீர்களா என்று செய்தி­யாளர்கள் வினவியதற்கு சொன்ன பதிலையே மீண்டும் கூறி வளா­கத்தைவிட்டு புறப்பட்டு­விட்டார் கைரி.

கைரிக்கு பின்னர் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சரான பெர்சாத்து கட்சியின் சையது சாதிக், பெர்சாத்து கட்சி மிதவாத மலாய்க்காரர் கட்சி என்றும் அதில் வந்து சேர்ந்துகொள்ளும்படியும் கைரிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.