ஜெனிவா: ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் எண்ணெய் கப்பலான 'சூப்பர்டேங்கர் கிரேஸ்' கிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டதாக பிரிட்டன் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை என்று பதில் கூறியுள்ள ஈரான், அனைத்துலக கடற்பகுதியில் கப்பல் சிறைபிடிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்துள்ளது.
கப்பலை விடுவிக்குமாறு பிரிட்டனுக்கு ஈரான் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கப்பல் சிறைபிடிக்கப் பட்ட விவகாரத்தில் சரியான பதிலடி கொடுக்காமல் விடப்போ வது கிடையாது என உள்ளூர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உரையில் ஈரானிய தற்காப்பு அமைச்சர் அமிர் ஹதாமி எச்சரிக்கை விடுத்தார்.
"பிரிட்டனின் இந்த நடவ டிக்கை அனைத்துலக விதிமுறை களை மீறும் செயலாகும்; ஒரு வகையான கொள்ளையாகும்," என அவர் சாடினார்.
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்துவரும் நிலையில் பிரிட்டனின் சிறைபிடிப்பு நடவடிக்கை ஈரானுக்கு மற்றொரு நெருக்கடியாக அமைந்துள்ளது.

