வாயை மூடுங்கள்: நஜிப் மீது செஃப் வான் பாய்ச்சல்

வாயை மூடுங்கள்: நஜிப் மீது செஃப் வான் பாய்ச்சல்

1 mins read
ffb1538d-845d-43bf-9bf8-36251cf81707
படம்: CHINA PRESS, BH FILE -

கோலாலம்பூர்: 'செஃப் வான்' என்றழைக்கப்படும் மலேசியாவின் பிரபல சமையல்கலை நிபுணணர் ரிட்சுவான் இஸ்மாயில் முன்னாள் பிரதமர் நஜிப் பேசாமல் இருப்பதே அவருக்கு நல்லது என்று தெரிவித்து உள்ளார். அண்மையில் ஃபெல்டா குடியேற்றவாசிகள் தொடர்பில் செஃப் வான் தெரிவித்த கருத்தின் தொடர்பில் அவருக்கும் நஜிப்புக்கும் இடையிலான வார்த்தைப் போர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வருகிறது.

ஃபெல்டா குடியேற்றவாசிகள் சோம்பேறிகள் என்றும் பூனைகளைப்போல பிள்ளைகளை வரிசையாகப் பெறுபவர்கள் என்றும் செஃப் வான் கூறியதாகச் செய்திகள் வெளியாயின. அந்தக் கருத்தைக் கடுமையாக விமர்சித்த நஜிப், செஃப் வானுக்குப் பேய் பிடித்திருப்பதால் அவ்வாறு கூறியிருப்பதாகத் தெரிவித்தார். நஜிப்பின் இந்த விமர்சனத்துக்கு செஃப் வான் நேற்று இன்ஸ்டகிராம் ஊடகம் மூலம் பதில் வெளியிட்டார்.

"நான் சொல்லாத வார்த்தைகளை நஜிப் திரித்து புரிந்துகொண்டுள்ளார். என் மீது பாய்வதற்கு முன் நான் தெரிவித்த வார்த்தைகளை நஜிப் கவனமாகப் படித்திருக்க வேண்டும். இவ்வாறு முரணாகக் கருத்துத் தெரிவிப்பதற்குப் பதில் அவர் பேசாமல் இருப்பதே நல்லது," என்று செஃப் வான் கூறியுள்ளார்.

ஃபெல்டா குடியேற்றவாசிகளின் முன்னேற ஊக்குவிக்கவும் அவர்களுடன் பேச்சு நடத்தவும் முன்னைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சுகள் தம்மை எவ்வாறு பயன்படுத்தின என்பதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.