காபூல்: ஆப்கானிஸ்தானின் அரசுப் படை கள் நடத்தில் தாக்குதலில் 20 தீவிரவாதி கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் குண்டுஸ் மாகாணத்தில் அரசுப் படைகள் வான்வழி மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்குப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய தீவிரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மைக்காலமாக மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
சில பகுதிகளைக் கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங் களைத் தலிபான்கள் தங்கள் வசப்படுத்தி உள்ளன. தீவிரவாத ஒழிப்புக் கூட்டுப்படை களுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தர விட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆப்கானிஸ்தான் விமானப்படை மற்றும் தரைப்படைகள் நேற்றுப் பின்னிரவில் நடத்திய தாக்குதலில் தலிபான் இயக் கத்தைச் சேர்ந்த 20 தீவிரவாதிகள் கொல் லப்பட்டனர் என ராணுவ செய்தித் தொடர் பாளர் குலாம் ஹஸ்ரத் கரிமி சொன்னார்.

