வாஷிங்டன்: வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பிற்காக பல நாடுகளை ஒன்றிணைத்து ராணுவ கூட்டணியை உருவாக்க வேண் டும் என்று அமெரிக்கா கூறி உள் ளது.
முக்கிய வர்த்தக கடல் பாதை யாகத் திகழும் ஈரான், ஏமனைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் சுதந் திரமாக சென்று வருவதை உறுதிப் படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார் அமெரிக்க ராணுவத் தலைவர் ஜோசப் டன்ஃபோர்ட்.
கடந்த மே, ஜூன் மாதங்களில் அக்கடல் பகுதியில் சுமார் ஆறு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட் டன.
இதற்கு ஈரான்தான் காரணம் என்றும் அதற்கு தன்னிடம் ஆதா ரம் என்றும் அமெரிக்கா கூறியது.
இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற் கான திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடிய மற்ற நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் சொன்னார்.
அதிநவீன கண்காணிப்பைப் பலப்படுத்தக்கூடிய கட்டளை, கட்டுப்பாட்டிற்கான கப்பலை அமெரிக்கா வழங்கும் எனச் சொன்னார் அவர்.
மற்ற நாடுகள் ரோந்துப் பணிக் கான படகுகளை வழங்கவும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளுக்கான கப்பலை வழங்கவும் வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாக கூறப்படுகிறது.
"இத்திட்டம் எவ்வளவு பெரிதாக செயல்படுத்தப்படும் என்பது இதில் இணையவுள்ள நாடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.
"குறைந்த நாடுகள் மட்டும் இணைந்தால் இதுவொரு சிறிய திட்டமாக இருக்கும்.
"பின்னாளில் வேறு நாடுகள் இதில் இணைய விரும் பினால், அப்போது விரிவுபடுத்தப் படும்," என்றார்.
கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, திருட்டை தடுக்கும் நடவடிக்கைகள் எனப் பல நாடுகளின் கடற்படை திட்டத்தில் பங்கேற்று வரும் அமெரிக்கா இவ் வட்டாரத்தில் ஏற்கெனவே பெரு மளவு கடற்படை இருப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக் கது.

