பாப்புவா நியூ கினியில் படுகொலை

பாப்புவா நியூ கினியில் படுகொலை

1 mins read
3cd9fa7d-f1aa-4c51-a629-a5a51663a247
-

பாப்புவா நியூ கினியிலுள்ள சிறிய கிராமத்தில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரு கிராமங்களுக்கு இடையிலான சண்டையின் காரணமாகத் துப்பாக்கிக்காரர்கள் இவ்வாறு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் நடந்த வன்முறைச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக ஹெலா மாநில ஆளுநர் ஃபிலிப் உன்டியாலு தெரிவித்தார். சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கப்போவதாக அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபே சூளுரைத்திருக்கிறார். வன்முறையால் ஏற்கெனவே நிலைகுலைந்துபோன இந்நாட்டில் இந்தப் படுகொலை மக்களின் வேதனையை அதிகரித்துள்ளது.

துணி போர்த்தப்பட்ட மாண்டோரின் சடலங்களைக் காட்டும் படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. உயிரிழந்தோரில் பிள்ளைகளும் அடங்குவர். சாலையோரத்தில் அந்தச் சடலங்கள் பனை இலைகளின்மீது வைக்கப்பட்டிருந்ததை அந்தப் படங்கள் காட்டின.