(காணொளி): நெடுஞ்சாலையில் லாரிலிருந்து கீழே சிதறிய பணம்

நெடுஞ்சாலை வழியாக ரொக்க நோட்டுக் கட்டுகளைக் கொண்டு சென்ற லாரியின் கதவுகள் எதிர்பாராதவிதமாகத் திறந்துகொண்டதைத் தொடர்ந்து நோட்டுக்கட்டுகள் அந்தச் சாலையில் சிதறின. அதனைக் கண்ட வாகனமோட்டிகள் பலர் உடனே தங்கள் கார்களை ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு பண நோட்டுகளை முடிந்தவரை அள்ளிச்செல்வதைக் காட்டும் ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அந்த லாரியிலிருந்து கிட்டத்தட்ட 1,75,000 டாலர் மதிப்பிலான நோட்டுகள் லாரியிலிருந்து சிதறியதாக ‘சிஎன்என்’ நிறுவனம் தெரிவித்தது. இறுதியாக, சாலையில் கிடந்த சில நூறு வெள்ளி பணத்தை அதிகாரிகளும் லாரி பணியாளர்களும் சேகரித்தனர். பண நோட்டுக்களைச் சாலையிலிருந்து எடுத்துச் சென்ற பொதுமக்கள் அவற்றைத் திருப்பிக் கொடுக்குமாறு போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.