எண்ணெய் கப்பல் வழிமறிப்பு முயற்சி முறியடிப்பு

துபாய்: இங்கிலாந்து எண்ணெய்க் கப்பல் ஒன்றினை வழிமறித்த ஈரானின் முயற்சியை இங்கிலாந்து கடற்படை முறியடித்தது. 

நேற்று முன்தினம் இங்கிலாந்து எண்ணெய் கப்பலொன்றை ஹோர்மூஸ் நீரிணையில் வைத்து இடைமறிக்க ஈரானியப் படையி னரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி போர்க்கப்பலின் உதவியுடன் முறி யடிக்கப்பட்டது.

பெர்சிய வளைகுடா பகுதியில் இருந்து அந்த வர்த்தக எண்ணெய் கப்பல் வெளியேற முயன்றபோது மூன்று ஈரான் கப்பல்கள் அதனை வழிமறிக்க முயன்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் ஜிப்ரால்டர் என்ற எண்ணெய் கப்பல் ஒன்றை இங்கிலாந்து படை கள் பிடித்தததையடுத்து, தற்போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது கவனிக்கத்தக்கது. 

ஜிப்ரால்டர் கப்பலில் ஈரானில் இருந்து சிரியாவிற்கு எண்ணெய் கொண்டுச் செல்லப்பட்டது என்ற சந்தேகத்தையும் இங்கிலாந்து முன்வைத்தது.

ஆனால், அதில் இருந்த எண் ணெய் சிரியாவிற்குக் கொண்டு செல்லப்படவில்லை என்று ஈரான் மறுப்புத் தெரி வித்தது. மேலும் இங்கிலாந்தின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக் கப்படும் என்றும் இதன் விளைவு களைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் கூறியிருந் தது. இதற்கிடையே, அணுவாயுத ஒப்பந்தத்தையும் ஈரான் மீறியதால், மற்ற நாடுகளுடன் பிரச்சினை முற்றியது.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமரின் செய்தித்தொடர்பாளர், “ஈரானின் இந்த நடவடிக்கையால் நாங்கள் கவலை கொண்டுள் ளோம். 

“அதிகரித்து வரும் பதற்றங் களை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஈரானிய அதிகாரிகளைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

“வளைகுடாவில் இங்கிலாந் துக்கு நீண்டகால கடல் இருப்பு உள்ளது. அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

“அனைத்துலக சட்டத்தின்படி கடல்வழிப் போக்குவரத்துச் சுதந் திரத்தைப் பராமரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

“அதனால் இத்தகைய நடவ டிக்கைகளை ஈரான் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைவரான இவர் தொழில் நிமித்தமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார். படம்: இணையம்

13 Dec 2019

இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன்: எனது மரபணு தமிழகத்துடன் தொடர்புடையது

உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது. படம்: ஊடகம்

13 Dec 2019

ஊழியர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போனஸ் அளித்த நிறுவனம்

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. படம்: ஏஎஃப்பி

13 Dec 2019

போரிஸ் ஜான்சன் கட்சி வெற்றி