ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் பலி

இஸ்லாமாபாத்: பயணிகள் ரயில் ஒன்று, எதிரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 12 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகா ணத்துக்கு உள்ள ரஹிம் யார் கான் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்துக் குறித்துப் பாகிஸ்தான் ரயில்வே தரப்பில், “பாகிஸ்தானின் கவுட்டாவிருந்து லாகூருக்குச் சென்று கொண்டு இருந்த அக்பர் விரைவு ரயில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வல்ஹார் ரயில்வே நிலையத்தில் மற்றொரு ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் பலியாகினர். 80க்கும் மேற் பட்டவர்கள் காயமடைந்தனர்.

“காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

பலரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதால், பலி எண் ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ரயில் விபத்து மிகுந்த சோகத்தை அளித்துள்ளது. விபத்தில் இறந் தவர்கள் குடும்பத்துக்கு  ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்துத் தொடர் பில் தேவைப்படும் அவசர நடவடிக் கைகளை எடுக்கவும் ரயில்வே அமைச்சரைக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்,” என பதிவிட்டு உள்ளார்.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைவரான இவர் தொழில் நிமித்தமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார். படம்: இணையம்

13 Dec 2019

இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன்: எனது மரபணு தமிழகத்துடன் தொடர்புடையது

உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது. படம்: ஊடகம்

13 Dec 2019

ஊழியர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போனஸ் அளித்த நிறுவனம்

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. படம்: ஏஎஃப்பி

13 Dec 2019

போரிஸ் ஜான்சன் கட்சி வெற்றி