நிலமீட்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கோலாலம்பூர்: பினாங்கு நிலமீட்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பினாங்கு, பேராக் பகுதி களைச் சேர்ந்த நூற்றுக்கணக் கான மீனவர்கள் மலேசிய நாடா ளுமன்றத்திற்கு அருகில் ஒன்று திரண்டனர்.

மொத்தம் 1,821 ஹெக்டர் அளவிலான மூன்று செயற்கை தீவுகளை உருவாக்கும் திட்டத் தால், 10,000 பேரின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படும் என்று அவர் கள் கூறினர்.

72 நிபந்தனைகளுக்கு உட் பட்டு பினாங்கு நிலமீட்புத் திட்டத்திற்கு கடந்த வாரம் ஒப்பு தல் அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பினாங்கு போக்குவரத்து பெருந் திட்டத்திற்கு தேவையான S$15.1 பில்லியனைத் திரட்டுவதற்கான முயற்சியாகவும் பார்க்கப்படுகி றது.

“எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். நாங் கள் பிடிக்கும் கடல் உணவுகளின் அளவு குறைந்துவிடும்.

“இதனால் கடல்உணவின் விலை கடுமையாக உயரக் கூடும்,” என்றார் நுகர்வோர் அமைப்பின் பினாங்கு தலைவர் மொஹிதீன் அப்துல் காதர்.

நாடாளுமன்றத்திற்கு நடந்து சென்று தங்கள் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். 200 மீனவர்களுடன்  சமூக ஆர்வலர் கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டதால், சுமார் 400 பேர் போராட்டத்திற்குத் திரண்ட தாகக் கூறப்படுகிறது.