பெய்ரூட்: சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையில் நடக்கும் சண்டையில் இதுவரை 71 பேர் பலியாகினர்.
இதுகுறித்துச் சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, "சிரியாவில் வடகிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் நடந்த தாக்குதலில் 56 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யா மற்றும் சிரிய அரசு ஆபத்தான பல குண்டுகளை இட்லிப் மாநிலத்தில் வீசினர்," என்று தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

