சிங்கப்பூர் அருகில் உள்ள பாத்தாம் தீவையும் பிந்தான் தீவையும் இணைப்பதற்காக இந்தோனீசியா அதன் ஆக நீள மான கடல் பாலத்தை அடுத்த ஆண்டு கட்டத் தொடங்க உள்ளதாக நேற்று நாட்டின் அமைச் சரவை செயலகம் அறிக்கை வெளியிட்டது.
இதன்வழி சிங்கப்பூருடனான வர்த்தக உறவை வலுப்படுத்திக்கொள்வதுடன் வளர்ச்சி அடையவும் இந்தோனீசியா விரும்புகிறது.
பாலத்தைக் கட்டி முடிக்கக் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் வரை எடுக் கும் என்றும் இதற்கான செலவுகள் நான்கு டிரில்லியன் ரூப்பியா (S$385 மி.) ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபர் பதவியை ஏற்றுள்ள ஜோக்கோ விடோடோ, நாட்டின் உள்கட்டமைப்பைச் சீர்செய்யும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக 400 பில்லியன் அமெரிக்க டாலர் (S$542 பி.) செலவழிக்கத் திட்டமிட்டுள்ளார்.
கடல் வாணிபம், உற்பத்தி ஆகியவற்றின் தொடர்பில் சிங்கப்பூருக்கு ஏதுவான ஒரு மையமாக பாத்தாம் தீவு அமைக் கும் முயற்சியில் இந்தோனீசிய அரசு தீவிரம் காட்டுகிறது.
இதனால் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய முதலீடு கிட்டும் வாய்ப்பு உள்ளதாக அரசு நம்புகிறது.
பொதுப் பணிகளுக்கான அமைச்சு பாலம் கட்டும் சாத் தியத்தையும் பொறியியல் வடிவங் களைப் பகுப்பாய்வு செய்வதையும் இவ்வாண்டு இறுதிக்குள் முடித் திடும்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையே நிலவி வரும் வர்த்தக மோதலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தோனீசியா பாத்தாம் தீவை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது.
பாலம் கட்டும் திட்டத்தால் சிங்கப்பூருக்கும் நன்மை உண்டு. மேலும் அதிக சுற்றுப்பயணிகளை வரவழைக்க, சாங்கி விமான நிலையத்தில் தன் ஐந்தாவது முனையத்தைக் கட்ட விரும்பும் சிங்கப்பூரின் முயற்சிக்குப் பாலம் உதவிகரமாக இருக்கும்.
தளவாடச் செலவுகளைக் குறைக்கவும் வட்டாரத்தில் உள்ள இணைப்புகள் மற்றும் சுற்றுப் பயணத்தை மேம்படுத்தவும் பாலம் கட்டும் திட்டம் உதவும் என்று இந்தோனீசியா எதிர்பார்க் கிறது.

