துருக்கிக்கு ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணைத் தற்காப்பு அரண்

இஸ்தான்புல்: துருக்கி நாட்டின் வான் எல்லையைப் பாதுகாக்கும் வகையில் அதிநவீன ஏவுகணை தடுப்புக் அரணை ரஷ்யா வழங்கியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து துருக்கி அரசு தடுப்பு அரணை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தது.

மேலும் F-35 ரக போர் விமானம் தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். 

துருக்கி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூலை 31ஆம் தேதிவரை கெடு விதித்திருந்தார். 

மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின்மீது விதிக்கப்படும் பொருளியல் தடை துருக்கி மீதும் திணிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி S-400 ஏவுகணைகளைத் தடுப்புக் அரணின் முதல் பகுதியை நேற்று துருக்கி பெற்றுக்கொண்டது.