மீண்டும் போராட்டத்திற்குத் தயாராகும் ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்: நாடு கடத்தும் மசோதாவை முற்றிலுமாக கைவிடக் கோரி ஹாங்காங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சில குற்றங்களில் ஈடுபடுபவர்களை•சீனாவிற்கு நாடு கடத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள்  கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி பெரும் போராட்டம் நடத்தினர்.

இந்த மசோதா நிறைவேறுவதைத் தடுக்க ஹாங்காங் அரசாங் கத்தின் தலைமையகத்தைச் சுற்றி போராட்டக்காரர்கள் மனித சுவர் அமைத்து, அதிகாரிகளை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.

இதனால் மசோதா வாசிக்கப்படாமல் முடங்கியது. போராட்டமும் வெற்றி பெற்றது.

ஆனால், போராட்டக்காரர்களில் சிலர் போலிசார் மீது உலோக கம்பு களையும் கற்களையும் வீசியதால் வன்முறை வெடித்தது.

சுமார் 12 பேர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். ஹாங்காங் போலிஸ் அதனை வன்முறை என்று வகைப்படுத்தியது.

தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிக ளுக்கு இடையில் கடந்த செவ்வாயன்று  கேரி லாம் சர்ச்சைக்குரிய மசோதா கைவிடப்பட்டது என்றார்.

ஆனால், மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்படக்கூடும் என்ற சந்தே கம் எழுந்த நிலையில், மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

முதல் போராட்டம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், ஹாங்காங் தலைவர் கேரி லாம்மின் அலுவலகத்தை இவ்வார இறுதியில் முற்றுகையிட ஒன்றுகூடுமாறு நேற்று இணையங் களில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மசோதாவை முழுவதுமாக கைவிட வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

மேலும் போராட்டம் குறித்து ஹாங் காங் போலிஸ் விசாரணை நடத்தும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தும் போராட்டக்காரர்களுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது. 

நீதிபதியின்கீழ் சுதந்திரமான விசாரணை வேண்டும் என்கிறார்கள் போரா ட்டக்காரர்கள்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. படம்: ஏஎஃப்பி

13 Dec 2019

போரிஸ் ஜான்சன் கட்சி வெற்றி

இரவு உணவுக்காக அறையில் இருந்த குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கக் கதவைத் தட்டிய நண்பர், மூவரும் நினைவிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டார். படங்கள்: ஷின் மின் நாளிதழ், பேங்காக் போஸ்ட்

13 Dec 2019

தாய்லாந்து விடுதியில் எரிவாயு கசிவு: நினைவிழந்த நிலையில் கிடந்த சிங்கப்பூர் குடும்பம்

கடலில் மிதந்த விமானத்தின் பாகங்கள். படம்: ஏஎஃப்பி

13 Dec 2019

கடலில் மிதக்கும் விமானத்தின் பாகங்கள்