நடுவானில் குலுங்கிய விமானம்; 35 பேர் காயம்

ஹவாய்: கனடாவிலிருந்து ஆஸ் திரேலியா சென்றுகொண்டிருந்த விமானம் நடுவானில் ஆட்டம் கண்டதில் 35 பயணிகள் காயமடைந்தனர்.

ஏர் கனடா 33 ரக விமானம் 284 பயணிகள், 15 விமான பணியாளர்களுடன் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.33 மணிக்கு வான்கூவரில் இருந்து ஆஸ்திரே லியாவின் சிட்னி நோக்கி புறப்பட் டது.

ஹோனலூலுவிலிருந்து தென் மேற்கே 600 மைல் தொலைவில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென போயிங் 777-200 ஜெட் விமானம் ஆட்டம் கண்டது.

இதனைத் தொடர்ந்து விமா னம், அமெரிக்காவின் ஹானலூலு வில் நேற்று அதிகாலை 6.46 மணியளவில் தரையிறக்கப்பட் டது.

பயணிகளில் சிலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாக விமான நிறுவனம் கூறியது. அத்துடன் அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் அது தெரிவித்தது.

விமானத்தில் பயணப் பெட்டி கள் வைக்கும் உயரத்திற்குச் சென்று மோதியது.

அதே வேகத்தில் மீண்டும் கீழே விழுந்ததாகவும் ஒரு பயணி பிபிசி செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

விமான இருக்கைகளில் ரத்தக்கறை காணப்பட்டதாக மற் றொரு பயணி பதற்றத்துடன் கூறினார்.

அவசரகால பிராணவாயு கவ சங்கள் வெளியான நிலையில் புகைப்படங்கள் வெளியாகி உள் ளன.