ஆபாச வீடியோ: காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

ஆபாச வீடியோ: காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் அமைச்சர் ஒருவரை பாலியல் தொடர்பான ஆபாச வீடியோவில் சம்பந்தப்படுத்தி அதை மக்களிடம் பரப்பியவர்களும் அந்த காணொளியை தயார் செய்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

இருப்பினும் ஆபாச காணொளி விவகாரத்திற்கு முக்கிய காரணமானவர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த சதித் திட்டத்திற்கு பின்னணியில் ஒரு கூட்டணி இருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்று அப்துல் ஹமிட் கூறினார்.

அந்த காணொளி தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் ஒருவரை சம்பந்தப்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆபாச காணொளி திட்டமிடப்பட்ட சதித் திட்டம் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் சிலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை அவர் மறுக்கவில்லை.

இரு ஆடவர்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாக சொல்லப்படும் ஆபாச வீடியோ ஒன்று சென்ற மாதம் வெளியிடப்பட்டது.