சீனாவின் ராணுவப் பயிற்சி

சீனாவின் ராணுவப் பயிற்சி

1 mins read

அமெரிக்காவிடமிருந்து தைவான் ஆயுதங்களை வாங்கியதை அடுத்து சீனா அண்மையில் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறது. சீனாவின் ராணுவம் கடல் பகுதியிலும் வான் வெளியிலும் பயிற்சி மேற்கொண்டதாக சீன தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சீன ராணுவம் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் திட்டங்களில் இந்தப் பயிற்சியும் ஒன்று என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தப் பயிற்சி குறித்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரிடம் தைவான் அதிபர் பேசியிருக்கிறார்.