அமெரிக்காவில் சிறைச்சாலையை தாக்கியவன் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் சிறைச்சாலையை தாக்கியவன் சுட்டுக்கொலை

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவின் டகோமா நகரில் குடியேறிகள் தங்க வைக்கப்பட்டிருந்த தடுப்பு நிலையத்தின் மீது போலிசார் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நார்த்வெஸ்ட் தடுப்பு நிலையத்தின் மீது துப்பாக்கி வைத்திருந்த ஒருவன் தீ பற்றக்கூடிய சில கருவிகளை வீசியதாக போலிசாருக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.

அந்த இடத்திற்கு சென்ற போலிசார் துப்பாக்கி வைத்திருந்த அந்த ஆடவரை சுட்டுக் கொன்றதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த ஆடவர் வில்லியம் வான் ஸ்போரன்சென் என்று போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் அந்த தடுப்பு நிலையத்தில் இதற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக போலிசார் கூறினர். அமெரிக்காவில் உள்ள 10 நகரங்களிலிருந்து குடியேறிகளை வெளியேற்றத் தொடங்குவதற்கு முதல் நாள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது.