வாஷிங்டன்: ஈரான் வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா வருவதற்கான கட்டுப்படுத்தப்பட்ட விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃபும் அவரது பேராளர் குழுவும் அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத் தலைமையகத்திற்கும் ஈரானுக்கான ஐநா தூதரின் இருப்பிடத்திற்கும் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொம்பியோ தெரிவித்தார்.
"அமெரிக்க அரச தந்திரிகள் ஈரானில் சுதந்திரமாக சுற்றி வர அனுமதிக்கப்படவில்லை.
"அப்படியிருக்க ஈரான் அரச தந்திரிகளும் நியூயார்க்கில் சுதந்திரமாக சுற்றுவதற்கான காரணம் எதுவுமில்லை," என்றார் அவர்.
"ஐநா தலைமையகத்துடனான ஒப்பந்தம் தொடர்பாகதான் ஈரான் அரச தந்திரிகள் அமெரிக்கா வருவது தெள்ளத்தெளிவான ஒன்று," எனவும்சொஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் சொன்னார்.
இதைத்தொடர்ந்து, ஐநாவின் பொருளாதார, சமூக மன்றக்கூட் டத்திற்காக ஜாவத் ஜரிஃப் தன் பேராளர் குழுவுடன் நியூயார்க் சென்று சேர்ந்தார்.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரிஃப்பை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் போவதாக அமெரிக்கா கூறி வந்த வேளையில், அவருக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

