கோலாலம்பூர்: குழாய் பதிக்கும் சீன நிறு வனத்திடம் இருந்து 330 மில்லியன் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் மகாதீர் கூறியுள்ளார்.
சைனா பெட்ரோலியம் என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட 2.3 பில்லியன் மதிப்பிலான குழாய் பதிக்கும் இரு திட்டங்கள் ஓராண்டிற்கு முன் நிறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தற்போது பணம் 1 மில்லியன் ரிங்கிட் (330 மில்லியன் வெள்ளி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் 13 விழுக்காட்டு பணிகளை மட்டுமே முடித்துள்ள நிலையில், 80 விழுக்காட்டு பணம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாக மகாதீர் செய்தியாளர்களிடம் கூறினார்.

