போர்ட் மேரெஸ்பை: பாப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ மாகாணத்துக்குட்பட்ட கான்ட்ரியன் நகர் அருகில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கான்ட்ரியன் நகரில் இருந்து வடக்கில் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்நாட்டு நேரப்படி மாலை 6.12 மணியளவில் பூமிக்கு அடியில் சுமார் 59 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.2 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

