சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் அக்கா பேரனுக்கும் நேற்றுக் காலை கோபாலபுரம் இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
கருணாநிதி நினைவுநாளான ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குப் பின்னர் நிச்சயதார்த்தம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்ததாம். ஆடி மாதம் என்பதால் தற்போதைய ஆனி முகூர்த்த நாளிலேயே சோதிடர்கள் அறிவுரைப்படி நேற்று நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. திமுகவினருடன் அதிமுகவினர் நட்பு பாராட்டுவது என்பது நடக்க இயலாத காரியமாக இருந்தது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நிலைமை மாறிவிட்டது.

