பாகிஸ்தான் தனது நாட்டின் ஆகாயவெளிக்குள் நுழைய பயணிகள் விமானங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு பயணி விமானங்கள் மீதான அந்தத் தடை அகற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் ஐந்தாவது முறையாக இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 26ஆம் தேதி வரை தடையை நீட்டிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பை பாகிஸ்தான் இன்று காலை மீட்டுக்கொண்டது.
இந்த ஆகாயவெளி மூடலால் இந்திய விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 550 கோடி ரூபாயை இழந்துள்ளன.
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பாகிஸ்தானில் தளம்கொண்டுள்ள பயங்கவராதக் குழு ஒன்று இந்தியத் துணை ராணுவப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வான்வழி மோதல்கள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிப்ரவரி மாதத்தில் தனது ஆகாய வெளியை மூடியது.

