பாலியின் தெற்குப் பகுதியில் கடலடி நிலநடுக்கம்

பாலியின் தெற்குப் பகுதியில் கடலடி நிலநடுக்கம்

1 mins read
6a1a933e-4bbe-4186-b635-2d6a91c3c046
-

இந்தோனீசியாவின் பாலி தீவுக்கு அருகே ஏற்பட்ட கடலடி நிலநடுக்கத்தால் அந்தத் தீவின் சில கட்டடங்கள் ஆட்டங்கண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

ஆயினும், 6.1 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் இல்லை என்று 'இஎம்எஸ்சி' நிலநடுக்கக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. இருந்தபோதும் கட்டடங்கள் சில சேதமடைந்திருப்பதை சமூக ஊடகங்களில் வலம் வரும் படங்கள் காட்டுகின்றன.

பாலியின் தலைநகர் டென்பசாரிலிருந்து 102 கிலோமீட்டர் தென்மேற்கில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அது 100 கிலோமீட்டர் ஆழமாக இருந்ததாகவும் 'இஎம்எஸ்சி' கூறியது.

நிலநடுக்கத்தின் ஆரம்பக்கட்ட அளவு 5.7 ஆக இருந்ததாக அமெரிக்க புவியியல் கருத்தாய்வு குறிப்பிட்டது.