தெற்கு பாலியில் கடலடி நிலநடுக்கம்; ஆலயம் சேதம்

தெற்கு பாலியில் கடலடி நிலநடுக்கம்; ஆலயம் சேதம்

1 mins read
4a611ebd-dcf6-4c94-b2c3-3cffd6432701
-

ஜகார்த்தா: தெற்கு இந்தோனீசியாவின் பாலியில் கடலுக்கு அடியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டென்பசாரில் உள்ள இந்து ஆலயம் கொஞ்சம் சேதமடைந்ததுடன் விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுப்பயணிகளும் அந்நகரவாசிகளும் கட்டடங்களிலிருந்து வெளியேறினர்.

நிலநடுக்கத்தால் உயிர்ப்பலி பற்றித் தகவலில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. பாலித் தீவின் தலைநகரான டென்பசாரிலிருந்து 102 கி.மீ. தென்மேற்குத் திசையில் 100 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்ததாக ஐரோப்பிய நிலநடுக்கக் கண்காணிப்பு முகவையான இஎம்எஸ்சி தெரிவித்தது. டென்பசாரில் உள்ள லோகநாதா இந்துக் கோவிலில் கட்டடத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்திருப்பதைக் காட்டும் படம் ஒன்றை இந்தோனீசியாவின் பேரிடர் மீட்பு அமைப்பு வெளியிட்டிருந்தது.