டிரம்ப்பின் கடுமையான சொற்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் எதிர்ப்பு

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்கு பெண் உறுப்பினர்களுக்கு எதிரான கண்டனங்களை டுவிட்டர் மூலம் வெளியிட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் நாடாளுமன்றக் கீழவை கண்டித்துள்ளது.

திரு டிரம்ப்பின் கருத்துகள் இனவாதம் மிக்கவை என்றும் அதனால் புதிய குடியேறிகளுக்கு எதிரான பயத்திற்கும் வெறுப்புக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிடும் தீர்மானத்திற்குக் கீழவையில் 240 ஆதரவு வாக்குகள் கிடைத்தன. 187 உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட ஜனநாயக நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹன் ஓமார், அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் கருத்துரைத்திருந்தார். அவருக்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். அடுத்து திரு டிரம்ப், சிலர்  அமெரிக்காவுக்குத் தொடர்ந்து புத்திமதிகளைக் கூறுவதை விடுத்து தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பலாம் என டுவிட்டரில் கூறினார். திருவாட்டி ஓமார் சோமாலியாவில் பிறந்த கறுப்பினத்தவர் என்பதால் திரு டிரம்ப்பின் கருத்தில் இனவாதம் இருப்பதாக அவரை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். வேறு சிலரோ, வேறொரு நாட்டிலிருந்து வரும் குடியேறிகள் அமெரிக்காவைக் குறைகூறினால் அமெரிக்க அதிபர் இதைத் தவிர வேறு என்ன கூற முடியும் எனக் கருதுகின்றனர்.

தமது கருத்தில் இனவாதமே இல்லை என்று திரு டிரம்ப், அழுத்தம் திருத்தமாக டுவிட்டரில் கூறியுள்ளார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பசிபிக் தீவுகள் மாநாட்டின்போது நடைபெற்ற தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் (இடமிருந்து வலம்) நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா, சமோவா பிரதமர் துயிலேப்பா ஐயோனோ, மைக்ரோனீசியா கூட்டரசு மாநிலங்கள் பிரதமர் டேவிட் பனுவேலோ. படம்: இபிஏ

18 Aug 2019

ஃபிஜி பிரதமர்: ஆஸ்திரேலியப் பிரதமர் இழிவுபடுத்துகிறார்

பயங்கரவாதிகளை ஒழித்துவிட்ட தால் இலங்கை வருவோருக்கு நூறு விழுக்காடு பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறார் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க. படம்: ஊடகம்

18 Aug 2019

இலங்கை அமைச்சர்: தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டினருக்கு எந்தத் தொடர்புமில்லை

நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிட்டனர். படம்: ஊடகம்

18 Aug 2019

ஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் 15 சாமி சிலைகள் உடைப்பு; இந்தோனீசிய ஆடவர் கைது