உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்துக்குச் சரிந்த பில்கேட்ஸ்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்துக்குச் சரிந்த பில்கேட்ஸ்

1 mins read
f37c7c7c-63ea-4aad-9cdb-b29344751e11
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் தமது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே பல ஆண்டு காலமாக முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. -

நியூயார்க்: உலகில் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது ஆகப் பெரிய பணக்காரர் என்ற நிலையில் இருந்த பில்கேட்ஸை பிரான்சை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்கெனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில், பிரான்சின் LVMH நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம்பர்க் கூறியுள்ளது.

தற்போதும் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் முதலிடத்திலும் 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் இரண்டாம் இடத்திலும் 107 பில்லியன் டாலர் சொத்துகளுடன் பில்கேட்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

பில்கேட்ஸ் தமது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே பல ஆண்டு காலமாக முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.