பாலியல் காணொளி விவகாரம்; அன்வாரைப் பதவி விலகச் சொல்லும் அஸ்மினின் ஆலோசகர்

பாலியல் காணொளி விவகாரம்; அன்வாரைப் பதவி விலகச் சொல்லும் அஸ்மினின் ஆலோசகர்

1 mins read
1cf896e7-d320-4961-8e42-7aa68e183d0c
-

கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம், பாலியல் காணொளி விவகாரத்தில் சிக்கியிருக்கும் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை ஆதரிக்காததால் அவர் அரசியலிலிருந்து விலகவேண்டும் என்று திரு அஸ்மினின் தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டைக் குறிப்பிடும் அறிக்கை ஒன்றை ஆதரித்து கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் 64 உறுப்பினர்களில் திரு அஸ்மினின் ஆதரவாளர்களாக உள்ள 23 பேர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

காணொளியில் இருப்பவர் பொருளியல் விவகார அமைச்சராகவும் பணியாற்றும் திரு அஸ்மின் என்பது நிரூபனமானால் அவர் பதவி விலகவேண்டும் என்று 71 வயது திரு அன்வார் கூறியதைத் திரு அஸ்மினுக்கு விசுவாசமானோர் கண்டித்துள்ளனர். கட்சியின் ஒற்றுமையைக் கட்டிக்காத்து திரு அஸ்மினை ஆதரிப்பதற்குப் பதிலாகத் திரு அன்வார் தமது சொந்த அரசியல் லட்சியங்களுக்காக அவரை ஓரங்கட்டுவதாகக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.