மலேசியாவில் கள்ளக் குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு

மலேசியாவில் கள்ளக் குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு

1 mins read

புத்ரா ஜெயா: மலேசியாவில் இருக்கும் கள்ளக்குடியேறிகளுக்கு மேலும் ஒரு பொது மன்னிப்புத் திட்டத்தை வழங்க அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டம் ஆகஸ்டு 1ல் தொடங்கி டிசம்பர் 31 வரையில் அமலில் இருக்கும். பயண ஆவணங்களை உடையவர்கள் குடிநுழைவுத் துறைக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். 700 ரிங்கிட் கட்டணத்தில் அதனைச் செய்ய வேண்டும்.

எந்த ஒரு ஆவணங்களையும் கொண்டிராதவர்கள் தங்கள் நாட்டுத் தூதரகத்துக்குச் சென்று அவற்றை பெற்றுவர வேண்டும். ஆவணம் இல்லாதவர்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.

கடந்த பொது மன்னிப்புத் திட்டத்தின் வாயிலாக 840,000 பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

கள்ளக்குடியேறிகளிடம் அபராதமாக 40 கோடி ரிங்கிட் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.