மனிதனின் முதல் நிலவு பயணத்தை நினைவுகூரும் கூகல்

மனிதனின் முதல் நிலவு பயணத்தை நினைவுகூரும் கூகல்

1 mins read
abb68edc-f6ef-4712-ad29-7d119b629f20
-

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாசாவின் அப்போலோ 11 விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக கூகல் தேடுதளம் தனது முகப்பில் டூடல் எனப்படும் ஓவியத்தை வைத்துள்ளது.

1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதியன்று தொடங்கிய அந்தப் பயணத்தில் மனிதர்கள் நிலவுக்குச் சென்று ஜூலை மாதம் 25ஆம் தேதி வெற்றிகரமாகத் திரும்பினர். இந்தப் பயணம், நிலவைப் பற்றிய மனிதர்களின் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது.

படத்தை 'கிளிக்' செய்பவர்கள் இது பற்றிய ஒரு காணொளியையும் பார்க்க முடியும். பயணத்தில் ஈடுபட்டிருந்த பழம்பெரும் விண்வெளி வீரர் ஒருவர் தமது அனுபவத்தை இந்தக் காணொளியில் விளக்குகிறார். நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் அல்ட்ரின், மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் நிலவுக்குச் சென்றனர். இதன் வெற்றிக்காகக் கிட்டத்தட்ட 400, 000 பேர் உழைத்துள்ளனர்.