நியூசிலாந்து: கிறைஸ்ட்சர்ச் நகரில் எரிவாயு வெடிப்பு

நியூசிலாந்து: கிறைஸ்ட்சர்ச் நகரில் எரிவாயு வெடிப்பு

1 mins read
c7e4d79a-b76c-4eb5-a5d4-c362a7981675
-

நியூசிலாந்தின் தெற்குத் தீவிலுள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் நடந்தில் வீடு ஒன்று தீப்பற்றியது. இந்தச் சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர். இது ஒரு விபத்து என்றும் எவரும் இது திட்டமிட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிவாயு வெடித்தாக போலிசாருக்கு காலை 10.15 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று தீயணைப்புத் துறை பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்தில் நான்கு தீயணைப்பு வாகனங்கள், சிறப்பு தளபத்தியப் படை, தீச்சம்பவ விசாரணை அதிகாரி இருந்ததாக அவர் கூறினார். ஆறு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.